பேஷன் டிசைனராகிறார் லட்சுமிமேனன்: தொடர்ந்து நடிக்கவும் முடிவு

Bookmark and Share

பேஷன் டிசைனராகிறார் லட்சுமிமேனன்: தொடர்ந்து நடிக்கவும் முடிவு

கும்கி படத்தில் அறிமுமான லட்சுமி மேனன், செம ராசியான நடிகை. அவர் பேரழகி இல்லை. ஆனால் எளிமையான அழகு. பக்கத்துவீட்டு முகம். அதனாலேயே அவரை எல்லோருக்கும் பிடித்து விட்டது.

அதோடு அதிர்ஷ்டம் அவர் பக்கம் நிற்க அவர் நடித்த பாண்டியநாடு, மஞ்சப்பை, கொம்பன், நான் சிகப்பு மனிதன், சுந்தரபாண்டியன் என நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்.

இப்போது அஜீத்துடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார். ஒரு கட்டத்தில் "எனக்கு பாவாடை தாவணி அணியும் கிராமத்து கேரக்டர்களாகவே வருகிறது. அதனால் நடிப்பை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தப்போகிறேன்" என்று ஒரு பேட்டியை தட்டிவிட பரபரத்தது மீடியா.

எனவே அவரது படிப்பை டார்க்கெட் செய்தது. படிப்பா நடிப்பா என்ற பட்டிமன்றமே நடந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்ளுக்கு முன்பு பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியாக யாரோ ஒரு லட்சுமி மேனன் பெயிலாக,  இவர் பெயிலானதாக பரபரவென செய்தி பரவியது.

"அய்யோ நான் படிப்பது சிபிஎஸ்இ ஸ்கூல். ரிசல்ட் வந்திருப்பது ஸ்டேட்போர்டு" என்று கதறினார் லட்சுமி மேனன். பரபரப்பு அடங்கியது.நேற்று வெளியான சிபிஎஸ்இ தேர்வு முடிவில் லட்சுமிமேனன் பாஸாகி விட்டார்.

நாட்டுக்கு தேவையான நல்ல செய்தி வெளியானதும் லட்சுமி மேனனும், மீடியாக்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பாஸாகி விட்ட சந்தோஷத்தை தனது தோழிகள், நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்களுடன் பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டார் அதில் தான் படித்த கொச்சி திருவங்குளம் பவன்ஸ் வித்யா மந்திர் பள்ளி ஆசிரியைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

லட்சுமி மேனன் படித்தது வணிகவியல் பாடப் பிரிவு. அதில் பாஸாவது எளிமையானது என்பதையெல்லாம் விட்டு விடுங்கள். அடுத்து அவர் பெங்களூரில் உள்ள பிரபலமான பேஷன் டிசைனிங் கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போகிறார்.

மொத்தமே ஆண்டுக்கு 100 நாள் நேரடியாக கிளாசுக்கு போனால்  போதும் மற்ற நாட்கள் எல்லாம் பிராக்டிக்கல்தான். அதனால் இதனை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவும் முடிவு செய்திருக்கிறார். எப்படியோ லட்சுமி மேனன் ஹேப்பி அண்ணாச்சி...


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions