சினிமாலதான் நான் ஹோம்லி.. நிஜத்தில நான் வேற மாதிரி- லட்சுமி மேனன்

Bookmark and Share

சினிமாலதான் நான் ஹோம்லி.. நிஜத்தில நான் வேற மாதிரி- லட்சுமி மேனன்

தென்னிந்திய சினிமாவின் அதிகம் விரும்பப்படும் நாயகியாக மாறிவிட்ட லட்சுமி மேனன், அவசரப்பட்டு படங்களை ஒப்புக் கொள்வதில்லை. தன் படிப்புக்கான நேரம் போக, மீதியிருக்கும் நேரத்தில்தான் படம் நடிக்கிறார்.

அதுமட்டுமல்ல, சினிமாவில் வருவது போன்ற அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பெண் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், " சினிமாவுல வர்ற மாதிரி ஹோம்லியான பொண்ணு இல்ல நான். நிஜத்துல என் கேரக்டரே வேற. படத்துல வர்ற ஒரு கேரக்டர் ரோலை பார்த்துட்டு, இதுதான் அவங்க ஒரிஜினல் ரோல்னு தயவு செய்து முடிவு செய்யாதீங்க. நான் படத்துல வர்ற கேரக்டர் மாதிரி கிடையாது.

டோட்டலா வேற மாதிரி. நிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாதுங்க.. அதே மாதிரி படத்தின் வேடத்துக்கு ஏத்த மாதிரி நடிக்க எனக்கு தயக்கமில்லை. பாவாடை தாவணிதான் என் பர்மன்ட் உடைன்னும் நினைச்சிக்காதீங்க,'' என்று கூறியுள்ளார். ஹலோ டைரக்டர்ஸ்.. காதுல விழுந்ததா!


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions