வட்டத்திற்குள் நிற்க விரும்பாத லட்சுமிமேனன்!

Bookmark and Share

வட்டத்திற்குள் நிற்க விரும்பாத லட்சுமிமேனன்!

கும்கி தொடங்கி கொம்பன் படம் வரை ஹீரோயினியாக மட்டுமே நடித்து வந்த லட்சுமிமேனன், தற்போது அஜித்தின் 56வது படத்தில் தங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் மறுத்தபோதும், எனக்கு ஹீரோயினி இமேஜ் தேவையில்லை.

நான் நடிகையாக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார்.அதையடுத்து, தங்கையாகி விட்ட நடிகையை எப்படி கதாநாயகியாக புக் பண்ணுவது என்று சிலர் தயங்கி நின்றபோது, நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்திராஜன், ஜெயம்ரவியை வைத்து தான் இயக்கும் ஹாரர் படத்துக்கு மீண்டும் கதாநாயகியாக அவரை புக் பண்ணியுள்ளார்.

இந்த படத்தில் லட்சுமிமேனன் ஹீரோயினி என்பதைவிட ஒரு மிரட்டலான வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள்.இந்தநிலையில், தன்னை சந்திக்கும் சினிமா நண்பர்களிடம், எனது தாய்மொழியான மலையாள சினிமாவில் இப்படித்தான் ஒரு படத்தில் கதாநாயகி என்றால், இன்னொரு படத்தில் தங்கையாக நடிப்பார்கள். மற்றொரு படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பார்கள்.

அதனால் நானும் அப்படி நடிக்கவே ஆசைப்படுகிறேன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று என்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறி வருகிறார். 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions