ரியல் கெட்டப் லட்சுமிமேனனுக்கு ஒர்க்அவுட் ஆகவில்லையாம்!

Bookmark and Share

ரியல் கெட்டப் லட்சுமிமேனனுக்கு ஒர்க்அவுட் ஆகவில்லையாம்!

அட்டக்கத்தி படத்தில் நடித்த நந்திதா அந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்ததால் அதன்பிறகு அவரை அந்த மாதிரி வேடங்களிலேயே அதிகமாக நடிக்க வைத்தனர். அந்த கெட்டப் அவருக்கு கச்சிதமாக பொருந்தியதால் அவர் கிராமத்து பெண்தானோ என்று நினைக்கும் வகையில் அவரது நடிப்பும் இருந்தது. ஆனால் அவரோ நிஜத்தில் ரொம்ப மாடர்னான பெண்ணாம்.

தான் பெங்களூரில் இருந்தபோது எப்போதுமே மாடர்ன் கெட்டப்பில்தான் இருப்பாராம். நிஜ வாழ்க்கையில் அவர் படங்களில் நடிப்பது போன்ற காஸ்டியூம்களை அணிந்து கொண்டதே இல்லை.

அந்த வகையில் சினிமா மூலம்தான் வில்லேஜ் பெண்ணாக நான் வாழ்ந்திருக்கிறேன் என்கிறார் நந்திதா. அதேபோல் இப்போது லட்சுமிமேனனும் அவரை போன்றே கூறியுள்ளார்.

அதாவது கும்கி படத்தில் இருந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என பக்கா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தபோதிலும், நிஜத்தில் அவர் மாடர்னான பெண்ணாம்.

வீட்டிலும் சரி, வெளியில் செல்லும்போதும் சரி ஜீன்ஸ், டீசர்ட் போன்ற உடைகளைத்தான் அதிகமாக விரும்பி அணிவாராம். அந்த வகையில், சினிமாவில் சிப்பாய் படத்தில் மட்டும்தான் அவரது நிஜ கெட்டப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

ஆனால் அந்த படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. ஆக, எனக்கு சினிமாவில் ரியல் கெட்டப் ஒர்க்அவுட் ஆகவில்லை என்கிறார் லட்சுமிமேனன். 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions