பலத்த யோசனையில் லட்சுமிமேனன்!

Bookmark and Share

பலத்த யோசனையில் லட்சுமிமேனன்!

கும்கி நாயகி லட்சுமிமேனனின் நடிப்புக்கு கொம்பன் வரை நல்ல பெயரே கிடைத்திருக்கிறது. இப்போதைய நடிகைகளில் அவர் அளவுக்கு யாராலும் இயல்பாக நடிக்க முடியாது என்ற பெயரையே சம்பாதித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் புதிய படத்திற்கு அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ப்ளஸ்-2 தேர்வெழுதியுள்ள லட்சுமிமேனன், அடுத்தகட்டமாக கடுமையான யோசனையில் இருக்கிறாராம்.

அதாவது, நல்ல நடிகை என்று பெயரெடுத்து விட்டபோதும், சினிமாவில் நீண்டகாலம் பயணிக்க முடியுமா? இல்லை இன்னும் சில படங்களோடு பயணம் முடிந்து விடுமா? என்கிற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.

அதனால், ப்ளஸ்-2 வோடு படிப்பை ஏறக்கட்டி விட வேண்டியதுதான் கொம்பனுக்கு முன்புவரை கூறி வந்த லட்சுமிமேனன், இப்போது சினிமா கைவிட்டாலும் கல்வி கைவிடாது.

அதனால் அடுத்து கல்லூரி படிப்பை தொடர்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று கூறி வருகிறார். இதைக்கேட்கும் அவரது அபிமானிகள், ஆற்றில் ஒரு காலும் சேற்றிலும் ஒரு காலும் வைப்பது போன்று, நடிப்பு- படிப்பு என்றிருந்தால் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாது.

அதனால், சினிமாதான் வாழ்க்கை என்று முழுசாக இறங்கி விடு. உனக்கு பெரிய இடம் காத்திருக்கிறது என்று அவரை சினிமாவுக்குள் இழுக்கிறார்களாம். விளைவு, என்ன முடிவெடுப்பது என்பது புரியாமல் பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம் லட்சுமிமேனன்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions