லட்சுமி மேனன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார் சாமி

Bookmark and Share

லட்சுமி மேனன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார் சாமி

உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற வில்லங்க படங்களை எடுத்த சாமி. கங்காரு படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை எடுத்தார். முந்தைய படங்கள் பரபரப்பை கிளப்பி அதன் மூலம் கொஞ்சம் ஓடியது.

கங்காருவால் நடக்ககூட முடியாமல் போனது. இதனால் பழைய பாணிக்கே திரும்பி விடலாமா என்று சாமி தீவிரமாக யோசித்து வருகிறார். அடுத்து இன்றைய நவீன பெண்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள்.

அவர்களுக்கு வரும் பிரச்னைகள் ஆகியவற்றை மையமாக கொண்டு வில்லங்கமான ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். சிந்து சமவெளியில் அமலாபாலையும், உயிரில் சங்கீதாவையும், மிருகத்தில் பத்மப்ரியாவையும் வைத்து கலங்கடித்த சாமி அடுத்து லட்சுமி மேனனை நடிக்க வைக்க தீவிரமாக இருக்கிறார்.

தனக்கு கிராமத்து வேடம்தான் வருகிறது என்ற கவலையில் இருக்கும் லட்சுமிமேனனை, பக்கா மார்டன் பொண்ணாக காட்டும் முடிவில் இருக்கிறார் சாமி. இதற்காக படத்தின் ஒன் லைனை தொலைபேசியில் லட்சுமி மேனனிடம் கூறியிருக்கிறார் சாமி.

அது லட்சுமி மேனனுக்கு பிடித்து விட்டதாம். முழு கதையையும் கேட்டுவிட்டு என் முடிவை சொல்கிறேன் என்று லட்சுமி மேனன் கூறியிருக்கிறாராம். எப்படியும் கதை அவருக்கு பிடிக்கும் கண்டிப்பாக நடிப்பார் என்கிறார் சாமி.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions