ஆங்கில பேய் படங்களை பார்க்கிறார் லட்சுமிராய்

Bookmark and Share

ஆங்கில பேய் படங்களை பார்க்கிறார் லட்சுமிராய்

எப்போதும் நடிகைகள் சென்னையில் இருந்துக்கொண்டே வெளியூரில் இருக்கிறேன் என்பார்கள். அந்த வகையில் ராய்லட்சுமியை அவருடைய பர்ஷனல் நம்பருக்கு போன் செய்தால் முன்பையில் இருக்கிறேன் என்றார்.

உண்மை அதுவல்ல சவுக்கார்பேட்டை படபிடிப்பில் அம்மணி பிஸியாக இருக்கிறார். கடந்த 15 நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் தாண்டியிருக்கும் பெரும்களத்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படப்பிடிப்பு பாதிக்கும என்பதால் லட்சுமி இப்படி சொல்லியிருக்கலாம் என்று நாம் கருதியபோது அப்படி ஏதும் இல்லையாம். ஓட்டலில் தங்கி கதை கேட்பதும் தன்னுடைய நண்பர்களை ஓட்டலுக்கு வரவழைத்து நட்பை வாய் வார்த்தை மூலம் பரிமாறி கொள்கிறார்களாம்.

அதே நேரத்தில் திடீர் என்று சவுகார்பேட்டை பட இயக்குனர் வடிவுடையான் ராய்யை படபிடிப்பு தளத்துக்கு வரவழைத்து நடிக்க சொல்லி விடுகிறார். இதை மறுத்தால் பிரச்சனையாகி விடும்.

இனிமேல் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருக்க வேண்டும் அப்போது தான் இண்டஸ்ட்ரி நமக்கு முக்கியத்தும் கொடுக்கும் என்பதை உணர்ந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் படபிடிப்பில் கலந்து கொள்கிறாராம். ராய், இப்படத்தில் மாயா என்ற பெயரில் நடிக்கிறார். இதற்காக ஆங்கில பேய் படங்களை அதிகம் பார்த்து நடிக்கிறாராம்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions