தமிழ் நாட்டில் மனிதர்களே இல்லை..! நாட்டை விட்டே போகிறேன்..விடை பெற்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்..! என்னாச்சு..?

Bookmark and Share

தமிழ் நாட்டில் மனிதர்களே இல்லை..! நாட்டை விட்டே போகிறேன்..விடை பெற்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்..! என்னாச்சு..?

லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லா தளத்திலும் தனது திறமையை நிருபித்தவர்.
தவிர ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலமும் இவர் பிரபலமானார்.

இவர் சமூக இணையத்தளங்களான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளத்தில் தான் நடித்து வரும் படங்கள் மற்றும் தன்னுடைய படத்தின் புரோமோஷன்களையும், நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட செய்திகளையும் பதிவிட்டு வந்தார்.

பின்னர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் மேலும் புகழ் அடைந்தார். இதில் அவர் பயன்படுத்திய என்னம்மா இப்டீ பண்றீங்களேம்மா என்ற வசனம் பிரபலமடைந்தது. இதை இணையதளம் மற்றும் வளைதளங்களில் மீம்ஸ்களாக உருவாக்கி கலாய்க்கவும் செய்தார்கள்.

குஷ்புவும் இதேபோல ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அதில் ஒரு அப்பாவியை குஷ்பு அடிக்கப் பாய்ந்தார். அவ்வளவு தான் கொதித்து விட்டது தமிழ் நாடு.

நடிகை ஸ்ரீபிரியா போன்றவர்கள் வெளுத்து வாங்கி கண்டனம் தெரிவித்தனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் தலையும் உருண்டது.

பதிலுக்கு பொங்கினார் லட்சுமி. ஆனால், சமூக வலைத்தளங்களில் இவரை கழுவிக் கழுவி ஊற்றினார்கள் போராளிகள். கேலி, கிண்டல்கள் என மானம் கப்பல் ஏறியது.
இது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது.

இந்நிலையில், இன்று முதல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்தில் இருந்தும் தான் விலகப்போவதாகவும், தமிழ் நாட்டில் மனிதர்களே காணவில்லை. மனிதாபிமானம் செத்து விட்டது.என் சமூக அக்கறை யாருக்கும் புரியவில்லை. பெண் என்றும் பாராமல் கேலி செய்கின்றனர்.

இதே நிலை தொடருமானால் நான் நாட்டை விட்டே போய் விடுவேன்.

வலைதளங்களில் இதுவரை, தனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி. மேலும், என்னை காயப்படுத்தியவர்களுக்கும், அவமானப்படுத்தியவர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த முடிவுக்கு பலர் ஆட்சேபனை தெரிவித்திருந்தாலும், ஒரு சிலர் வரவேற்பும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய மனசு பண்ணி கொஞ்சம் வாழ்த்துங்க நண்பர்களே..!


Post your comment





Related News
விஜய்யுடன் நடிக்கவில்லை, ஆனால் அவரை புகழ்ந்த பிரபல நாயகி
லக்ஷமி ராய்க்கு கையில் காயம்- டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட நடிகை
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
பஸ் ஸ்டாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! மக்கள் கூட்டம்
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
தமிழக முதல்வரை கிழித்து தொங்கவிட்ட டிவி நடிகை (வீடியோ)







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions