ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்கும் வரை புறக்கணிப்போம் - லட்சுமி ராமகிருஷ்ணன்

Bookmark and Share

ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்கும் வரை புறக்கணிப்போம் - லட்சுமி ராமகிருஷ்ணன்

தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தொலைக்காட்சிகளுக்கும் இடையே தற்போது மிகப் பெரும் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு சில டிவிக்களைத் தவிர மற்ற டிவிக்களை எந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சிக்கும் அனுமதிப்பதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது.

வேறு வழியில்லாமல் அனைத்து தயாரிப்பாளர்களும் அதை பின்பற்றியிருக்கிறார்கள். இது பற்றி இதுவரை யாருமே வாய் திறக்காத நிலையில் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்துக்களைத் துணிந்து சொல்லியிருக்கிறார்.

இவர் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் தன்னையும் இயக்குனராகப் பதிவு செய்து கொண்டார். தற்போது அம்மணி என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது :

“சாட்டிலைட் உரிமை என்பது தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதாக இருந்தது. அதுவும் தற்போது தவறான நிர்வாகத்தாலும, செயற்கையான மிகைப்படுத்துதல் காரணமாகவும் தவறாகப் போய்விட்டது. அவர்கள் 50 சதவீதம் சாட்டிலைட் விலை என்கிறார்கள், ஆனால், 100 சதவீதமும், அதற்கு மேலும் சானல்களிடம் இருந்து பெற்றால் சானல்கள் அவற்றை எப்படி திரும்பப் பெற முடியும்.

பதவியில் இருப்பவர்களால் முரண்பட்டு செய்யப்பட்ட ஒரு விஷத்தால் சாட்டிலைட் மார்க்கெட் என்பது இல்லாமல் போய்விட்டது. சானல்களுடன் சண்டை போடுவதை விட அனைவரும் ஒன்றிணைந்து சானல்களுடன் இணைந்து பணியாற்றுவோம். மொத்த உயர்வுக்குப் போராடி, ஹீரோக்களின் சம்பளத்தைக் குறைக்க வைப்போம். தயாரிப்பாளர் கல்பாத்தி s அகோரம் போன்றவர்கள் இதையேதான் யோசித்து வைத்துள்ளார்கள்.

ஹீரோக்களுடன் லாபத்தை பங்கு போட வைப்போம் என்கிறார். ஹீரோக்கள் அவர்களது சம்பளத்தைக் குறைக்கும் வரை தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹீரோக்களைப் புறக்கணிப்போம். விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதை விட நல்லதொரு வழிக்காகப் போராடுவோம்,” என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்தக் கருத்துக்கு ஆதரவு கிடைக்குமா அல்லது எதிர்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions