80 வயது பாட்டியாக நடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

Bookmark and Share

80 வயது பாட்டியாக நடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

தமிழில் பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம் என்ற படத்தில் இருந்து இயக்குனரான அவர், அதையடுத்து நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தை இயக்கினார்.

முதல் படம் ஒரளவு அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது. ஆனால் இரண்டாவது படம் அந்த பெயரை கெடுத்து விட்டது. இருப்பினும், சோர்ந்து விடவில்லை லட்சுமிராமகிருஷ்ணன்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தான் சந்தித்த சில கலங்க வைக்கும் உண்மை சம்பவங்களுடன் தனது அடுத்த படமான அம்மணியை ஆரம்பித்து விட்டார். இந்த படத்தில் கமர்சியல் இருந்தபோதும் ஒரு முக்கியமான கதையை மையமாக வைத்திருக்கிறாராம் அவர்.

அதாவது, இன்றைய குடும்பங்களில் வயதானவர்கள் எப்படி கடைசி காலத்தில் பராமரிக்கப்படாமல் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்ற நெஞ்சை உருக்கும் கதையில்தான் அவர் பயணிக்கிறாராம்.

அதனால் படத்தில் பெருவாரியான கேரக்டர்கள் 60 முதல் 80 வரையிலான வயது கொண்ட கேரக்டர்களே நடிக்கிறார்களாம். இதில் ஒரு 80 வயது பாட்டியாக நடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம் படத்தில் லீட் ரோலில் நடித்த விஜி சந்திரசேகரை 60 வயது பாட்டியாக நடிக்க வைக்கிறாராம்.

இவர்கள் தவிர மேலும் சில முன்னணி செண்டிமென்ட் நடிகர் நடிகைகளும் இந்த அம்மணி படத்தில் அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கிறார்களாம்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions