“பைக் ஓட்டணும்.. தம் அடிக்கணும்” - அறிமுக நடிகைக்கு இயக்குனர் வைத்த டெஸ்ட்..!

Bookmark and Share

“பைக் ஓட்டணும்.. தம் அடிக்கணும்” - அறிமுக நடிகைக்கு இயக்குனர் வைத்த டெஸ்ட்..!

பொதுவாக தங்களது படம் வெளியாகும் தேதியில் சில பிரபல நடிகர்கள் வெளிநாடுகளில் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால் பிரசவித்த குழந்தையை பார்க்க துடிக்கும் தகப்பன் போல படத்தின் இயக்குனர் மட்டும் கள நிலவரம் அறிவதற்காக தனது உதவியாளர் படையுடன் தியேட்டர் தியேட்டராக சுற்றி வந்துகொண்டிருப்பார்.

ஆனால் படத்தை பக்காவாக முடித்து வைத்துவிட்டு, சொன்ன தேதியில் ரிலீஸ் செய்துவிடுங்கள் என உதவியாளர்களிடம் சொல்லிவிட்டு பத்து நாட்களுக்கு முன்னரே நண்பர்கள் இருவருடன் ஒரு மாதம் வெளிநாடு டூருக்கு கிளம்பி போனவர் என்றால் அது மலையாள இயக்குனர் லால் ஜோஸ் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

அந்த அளவுக்கு தனது படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார் லால் ஜோஸ். படமும் பிரமாதமாக ஓடி 100-வது நாள் விழாவை கொண்டாடியது. அதுதான் துல்கர் சல்மான் நடித்த 'விக்ரமாதித்யன்'.

தொடர்ந்து அடுத்து இன்னொரு சூப்பர்ஸ்டாரை வைத்து படம் இயக்குவார் என பார்த்தால் பெண்களை மையப்படுத்தும் கதையை படமாக்க ஆரம்பித்துவிட்டார். படத்தின் பெயர் 'நீனா'.

கதாநாயகன் கூட அவ்வப்போது குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் நடித்துவரும் விஜயபாபு தான். இந்தப்படத்தில் புதிய நாயகியாக தீப்தி சதி என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் என்றாலும் தீப்தி பாதி மலையாளி தான். இந்தப்படத்தில் நீனா என்கிற கதாபாத்திரத்தில், டைட்டில் ரோலில் நடிக்கிறார் தீப்தி. இந்தபடத்திற்கான நாயகி தேர்வு நடைபெற்றபோது தீப்தியிடம் “இந்தப்படத்தின் கேரக்டர்படி நீ ஸ்பீடா பைக் ஓட்டணும், சிகரெட் பிடிக்கணும்.. உன்னால் செய்யமுடியுமா?” என டெஸ்ட் வைக்க, அனைத்திலும் அசராமல் தேறியவர் தான் இந்த தீப்தி.

லால்ஜோஸின் முந்தைய அறிமுக நாயகிகளான காவ்யா மாதவன், சம்விருதா சுனில், மீரா நந்தன், அர்ச்சனா கவி, ரீனு மேத்யூஸ் என எல்லோருமே தங்களது குருவின் பெருமையை காப்பாற்றியவர்கள் தான்.

அந்த பட்டியலில் தீப்தியும் இடம்பிடிக்க தவறிவிடுவாரா என்ன? படத்தில் இன்னொரு கதாநாயகியாக, லால்ஜோஸின் இன்னொரு சிஷ்யையான ஆன் ஆகஸ்டின் நடிக்கிறார். தற்போது ரஷ்யாவில் படப்பிடிப்பை துவகியுள்ளார் லால் ஜோஸ்.


Post your comment





Related News
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions