ரஷ்யாவில் மைனஸ் 6 டிகிரி குளிரில் சிக்கிய லால்ஜோஸ் டீம்..!

Bookmark and Share

ரஷ்யாவில் மைனஸ் 6 டிகிரி குளிரில் சிக்கிய லால்ஜோஸ் டீம்..!

'விக்ரமாதித்யன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இன்னொரு முன்னணி நடிகரை தேடிப்போகாமல் பெண்களை மையப்படுத்தும் கதையை படமாக்க ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் லால்ஜோஸ்.

படத்தின் பெயர் 'நீ-நா'. இந்தப்படத்தில் புதிய நாயகியாக தீப்தி சதி என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். நீனா என்கிற கதாபாத்திரத்தில், டைட்டில் ரோலில் நடிக்கிறார் தீப்தி. மும்பையை சேர்ந்தவர் என்றாலும் தீப்தி பாதி மலையாளி தான். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் கடந்த இரண்டு வாரங்களாக முகாமிட்டு காட்சிகளை படமாக்கி வந்தார் லால்ஜோஸ்.

இவர் தற்போது படப்படிப்பை நடத்திய மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் குளிரின் தாக்கம் மைனஸ் 6லிருந்து மைனஸ் 10 டிகிரி வரை இருந்ததாம். கூடவே பனிப்பொழிவும் கடுமையாக இருந்ததாம்.. இந்தப்படத்தின் மொத்த டீமும் குளிருக்கு பாதுகாப்பான ஸ்வெட்டர், கையுறைகளை அணிந்திருந்ததால், அங்கே வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் ஏதோ ரஷ்யப்படத்தின் ஷூட்டிங் தான் நடக்கிறது என நினைத்துவிட்டார்களாம்.

போதாக்குறைக்கு கதாநாயகி தீப்தியும் பார்ப்பதற்கு ரஷ்யப்பெண் போலவே இருந்ததால் பல பெண்கள் அவரிடம் வந்து நட்பாகவும் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இந்த இடங்களுக்கு கடந்த மேமாதமே சுற்றுலா வந்து சென்றிருந்த இயக்குனர் லால் ஜோஸ், “சம்மரில் நான் பார்த்த இந்த இடங்கள் இப்போது குளிரில் வேறு ஒரு புதிய கதை சொல்கின்றன. பனிப்பொழிவுதான் என்றாலும் நாங்கள் நினைத்த மாதிரியே காட்சிகளை படமாக்கியுள்ளோம்” என்கிறார் திருப்தியுடன்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions