துல்கர் சல்மானுக்காக த்ரில்லர் கதை எழுதுகிறார் லால்ஜோஸ்..!

Bookmark and Share

துல்கர் சல்மானுக்காக த்ரில்லர் கதை எழுதுகிறார் லால்ஜோஸ்..!

கடந்த வருடம் துல்கர் சல்மான் மலையாளத்தில் இரண்டு ஹிட்டுகளை கொடுத்தார்.. ஒன்று 'பெங்களூர் டேய்ஸ்'... இன்னொன்று 'விக்ரமாதித்யன்'.

நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய விக்ரமாதித்யன் துல்கரின் காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என பலவித நடிப்புகளை வெளிக்கொண்டு வந்தது.. இரண்டு ஹீரோக்களை சரியாக பேலன்ஸ் செய்து லைட்டான ஆக்ஷன், மீடியமான காதல் என சரிவிகிதத்தில் கலந்து குடும்ப மசாலாவாக கிளறியிருந்தார் லால் ஜோஸ்.

தற்போது மீண்டும் லால்ஜோஸுடன் இணைகிறார் துல்கர்.. அதற்காக லால்ஜோஸ் தான் படத்தை இயக்குகிறார் என்று அர்த்தமில்லை. அவர் கதை, திரைக்கதை எழுத அவரது ஆஸ்தான கேமராமேனாகிய ஜோமோன் டி ஜான் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது மலையாளத்தில் லால்ஜோஸ் இயக்கிவரும் 'நீநா' என்கிற படத்தின் ஒளிப்பதிவாளர் இந்த ஜோமோன் டி.ஜான் தான். துல்கர் தமிழில் ஓரளவு தெரிந்த முகமாகிவிட்டார்.. ஜோமோனும் ஏற்கனவே சசிகுமார் நடித்த 'பிரம்மன்' படத்தின் ஒளிப்பதிவாளராக தமிழ் பீல்டுக்குள் நுழைந்துவிட்டவர்தான்.  

அதனால் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக இது உருவாக இருக்கிறதாம்.  இந்தமுறை த்ரில்லர் கதையை கையில் எடுத்திருக்கிறாராம் லால்ஜோஸ்.

 


Post your comment





Related News
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions