வீட்டில் கஞ்சா செடி வளர்த்து போலீஸில் சிக்கிய பெண் நடன இயக்குனர்

Bookmark and Share

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து போலீஸில் சிக்கிய பெண் நடன இயக்குனர்

சினிமா நடன இயக்குனர் லலிதாமணிக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி வீடு வளசரவாக்கத்தில் உள்ளது. இவர் தனது மொட்டை மாடியில் தொட்டிகளில் கஞ்சா செடி வளர்ப்பதாகவும், 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடிகள் வளர்ந்து இருப்பதாகவும் போலீஸிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் அங்கு குடியிருந்த 5 பேரைபோலீஸார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்களாம். மொட்டை மாடியில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியை போலீஸார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

ஆனால் போலீசாரிடம் கேட்ட போது, நாங்கள் கஞ்சா செடி எதையும் கைப்பற்றவில்லை. ரகசிய தகவல் வந்தது, அதன் பேரில் 5 பேரிடம் விசாரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பிடிபட்ட 5 பேர் கொடுத்த தகவலின் பேரில் லலிதா மணியின் உறவினர் அபிஷேக் என்பவரிடம் விசாரிக்க உள்ளனராம், போலீஸார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions