23 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த பிரபல மலையாள நடிகை திடீர் மரணம்

Bookmark and Share

23 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த பிரபல மலையாள நடிகை திடீர் மரணம்

மலையாள திரையுலகில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீலதாமேனன். ‘மிஸ் திருவனந்தபுரம்‘ பட்டமும் பெற்றிருந்த இவர், 200-க்கும் மேற்பட்ட டெலிவி‌ஷன் தொடர்களில் நடித்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உச்சத்தில் இருந்தபோது திடீரென உடல்நலம் பாதிக்கப் பட்டு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

ஸ்ரீலதாமேனனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அரிய வகை எலும்பு நோய் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். நோய் பாதிப்பு ஏற்பட்டதால் திரையுலகில் இருந்து விலகிய ஸ்ரீலதாமேனன் ஆஸ்பத்திரியில் தங்கி தொடர் சிகிச்சை பெற்றுக் கொண்டார். ஆண்டுகள் பல கழிந்த பின்பும் இவருக்கு நோய் குணமாகவில்லை. ஏராளமான பணம் செலவு செய்ததால் நெருக்கடிக்கு ஆளானார்.

இந்த தகவல் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு தெரிய வந்தது. அவர், ஸ்ரீலதாமேனன் மருத்துவச் செலவுக்கு உதவிசெய்தார். இதுபோல மலையாள நடிகர் சங்கமான அம்மாவும், ஸ்ரீலதா மருத்துவத்துக்கு பண உதவி செய்தது.

பலரது உதவியில் நடிகை ஸ்ரீலதாமேனன் 23 ஆண்டுகள் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அவருக்கு பூரண சுகம் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இவரது  உயிர் பிரிந்தது. இறந்து போன ஸ்ரீலதா மேனனுக்கு 47 வயது ஆகிறது. இவரது கணவர் மது ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.


Post your comment





Related News
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
இணையத்தில் வரவேற்பை பெற்ற எம்பிரான் ட்ரைலர்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஸ்ரீரெட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்- மேலும் ஒரு பிரபல நடிகை ஆவேசம்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions