கோச்சடையான் பட உரிமை விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

Bookmark and Share

கோச்சடையான் பட உரிமை விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் வினியோக உரிமையில் 10 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக ‘ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனத்தின் நிர்வாகி அபிர்சந்த் நாகர் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு மாநகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்,

அந்த மனுவில், “கோச்சடையான் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் நிறுவனம் தயாரித்தது. இதற்காக ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் ரூ.6.84 கோடி கடன் பெற்றது. இதற்கு உத்திரவாத கையெழுத்து போட்ட லதா ரஜினிகாந்த் சில சொத்துக்களின் ஆவணங்களை தாக்கல் செய்தார். அவை போலியான ஆவணங்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த பெங்களூரு மாநகர கோர்ட்டு, இது தொடர்பாக அல்சூட் கேட் போலீஸ் நிலையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து லதா ரஜினிகாந்த் பெங்களூரு ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு ஐகோர்ட்டு, ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறியதோடு, அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யுமாறு கீழ்க்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

பெங்களூரு ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோச்சடையான் பட உரிமையை தங்களுக்கு வழங்காமல் வேறு நிறுவனத்திற்கு வழங்கி ஏமாற்றியதாகவும், எனவே லதா ரஜினிகாந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகோய், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், இந்த மேல்முறையீட்டு மனு குறித்து 4 வார காலத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு லதா ரஜினிகாந்துக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions