யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடவில்லை: பொய்ப் புகார்தாரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை- லதா ரஜினிகாந்த் அறிக்கை

Bookmark and Share

யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடவில்லை: பொய்ப் புகார்தாரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை- லதா ரஜினிகாந்த் அறிக்கை

எனக்கு எதிராக தொடர்ந்து மோசடிப் பிரச்சாரம் செய்து வரும் பைனான்சியர் அபிர்சந்த் மற்றும் அவர் மனைவி மீது மான நஷ்ட வழக்குப் போட உள்ளேன் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, லதா ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோச்சடையான் படத்துக்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் வாங்கிய ரூ. 14 கோடியே 90 லட்சம் கடனுக்கு நான் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டதாகவும், அதில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப அளித்ததாகவும், மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகமல் இருக்க பொய்யான ஆவணங்களை அளித்து நீதிமன்றத்தில் தடை பெற்றதாகவும், அதற்காக என் மீது முதல் தகவலறிக்கையை பெங்களூர் போலீசார் பதிவு செய்துள்ளதாகவும் வெளியான செய்திகள் என் கவனத்துக்கு வந்தது.

இவை முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள். என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பவும், குறுக்குவழியில் ஆதாயம் பெறவும் மேற்கொள்ளப்படும் முயற்சி. கோச்சடையான் கடனுக்காக நான் எந்த இடத்திலும் உத்தரவாதக் கையெழுத்துப் போடவில்லை. அபிர்சந்த் நஹார் மற்றும் அவர் மனைவி சஞ்சல் நஹார் ஆகியோர் கிரிமினல் வழியில் எனக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து ஆதாயமடைய கடந்த ஓராண்டாகவே முயற்சித்து வருகின்றனர்.

அவர்களின் நெருக்கடிக்கு நான் பணியாததால், மீடியா மூலம் விஷமத்தனமான பிரச்சாரம் மேற்கொண்டு என்னிடமிருந்து பணம் பெற முயற்சித்தனர். அந்த சூழலில்தான் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம், இந்த தவறான பிரச்சாரத்துக்கு தடை பெற்றேன்.

2012-ம் ஆண்டில் அபிர்சந்தும் அவரது மனைவியும் எனக்கு எதிராக பெங்களூர் விதான் சவுதா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதுவும் தோல்வியில் முடிந்தது.
அவர்கள் அளித்த புகார்கள் மோசடியானவை எனத் தெரிந்து கொண்ட போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், உண்மையான தகவல்களை மறைத்து, மோசடியாக சில விஷயங்களைச் சித்தரித்து எனக்கு எதிராக தற்போது மீண்டும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

அபிர்சந்த் நஹார், சஞ்சல் நஹார் இருவரின் நோக்கமும் செயலும் மோசடியானது. தவறான பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டது. சட்ட விரோதமானதாகும்.
ஒரு பிரபலம் என்பதைப் பயன்படுத்தி என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பி நெருக்கடி தருவது சட்டப்படி குற்றம். இவர்களையும் இவர்கள் அவதூறுகளையும் நான் சட்டப்படி சந்திப்பேன். இருவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி தண்டனை பெற்று தருவவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளேன். என் நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டையும் பெறுவேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions