அவதூறு பரப்பிய பைனான்சியர் மீது லதா ரஜினி வழக்கு

Bookmark and Share

அவதூறு பரப்பிய பைனான்சியர் மீது லதா ரஜினி வழக்கு

தன் மீது அவதூறு பரப்பி, வீண் பழி சுமத்தியதாக பைனான்சியர் ஆட் பியூரோ நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லதா ரஜினிகாந்த். கோச்சடையான் படத்துக்காக பெற்ற பணத்தை திரும்பச் செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்த் மீது ஆட் பியூரா நிறுவனத்தினர் பிரஸ் மீட் வைத்து அண்மையில் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால் இந்த நூறுசதவீதம் வட்டி போட்டு மோசடியாக பணம் பறிக்கப் பார்ப்பதாக பதிலுக்கு கோச்சடையான் தயாரிப்பாளரான மீடியா ஒன் நிறுவனம் பதிலளித்திருந்தது.

இந்த நிலையில், ஆட் பியூரோ நிறுவனம் திட்டமிட்டு தன் மீது வீண்பழி சுமத்துவதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லதா. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லதா ரஜினிகாந்த், "ஆட் பியூராவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும்.

வீண் பழி சுமத்தி எனக்கு அவப்பெயர் தேடித் தருவதால் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். எனது பெயரை ஆட் பியூரா கெடுக்கிறது. கோச்சடையான் படத்திற்காக மீடியா ஒன் நிறுவனத்திற்கு ஆட் பியூரா ரூ.10 கோடி கடன் அளித்தது.

ஆனால் அப்போதே ரூ.1.2 கோடி கழித்துக் கொண்டுதான் தந்தது. தொடர்ந்து, ரூ.20 கோடி கடன் கொடுப்பார்கள் என்ற உத்தரவாதத்தில்பேரில்தான் ரூ.2.4 கோடி ஆட் பியூராவுக்கு திரும்ப செலுத்தினோம்.

ஆனால் அவர்கள் அந்தக் கடனைக் கொடுக்கவில்லை. மேலும் முதலில் வாங்கிய கடனில் ரூ.5.6 கோடி திரும்ப செலுத்துப்பட்டுவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, லதா ரஜினிகாந்த்துக்கு பதில் அளித்து ஆட் பியூராவைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லதா ரஜினிகாந்த் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை திரும்பச் செலுத்துவதாக ஆட் பியூரா நிறுவனத்துக்கு உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார்.

செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மேற்கொண்டு ரூ.20 கோடி தருவது பற்றி எங்கும் நாங்கள் குறிப்பிடவில்லை. லதா ரஜினிகாந்த் பொய்களைப் பரப்புகிறார். எங்களிடம் அவருக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions