பொன்ராம் படத்தில் இரட்டைவேடங்களில் நடிக்கும் லாரன்ஸ்

Bookmark and Share

பொன்ராம் படத்தில்  இரட்டைவேடங்களில் நடிக்கும் லாரன்ஸ்

கடந்தஆண்டு காஞ்சனா2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ராகவாலாரன்ஸ் மொட்டசிவா கெட்டசிவா மற்றும் பைரவா ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இப்படங்களை முடித்ததும் அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். ஐங்கரன்நிறுவனம் தயாரிக்கும் புதியபடமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வருத்தப்படாதவாலிபர்சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் அந்தப்படத்தை இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் தனித்தனியே ஐங்கரன் நிறுவனத்தின் படத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டிருந்தார்களாம்.

பொன்ராம் சொன்ன கதை லாரன்ஸ்க்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். அதோடு பொன்ராம் இயக்கிய இரண்டு படங்களுமே நல்லவெற்றியைப் பெற்றிருக்கின்றன.

அவரோடு லாரன்ஸூம் சேர்ந்தால் அந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்று விநியோகஸ்தர்களும் சொன்னதாகத் தெரிகிறது. இதனால் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் லாரன்ஸூக்கு இரட்டைவேடங்கள் என்று சொல்லப்படுகிறது. அவரே இயக்கிய படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தோற்றங்களில் அவர் நடித்திருக்கிறார் என்றாலும் இன்னொரு இயக்குநரின் படத்தில் இரட்டைவேடத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.  


Post your comment





Related News
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
காஞ்சனா-3 படத்தில் மிரட்ட வரும் ஓவியா - புகைப்படம் உள்ளே.!
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்
ஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா!
ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ்
130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்!
அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ்!
அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதி பயணம்: ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்தார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions