லாரன்ஸை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

Bookmark and Share

லாரன்ஸை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘இறைவி’ படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சி.வி.குமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது மும்முரமாக இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. விஜய்யிடம் போய் கதை கூறி இருப்பதால், அவரை இயக்குவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, அடுத்ததாக லாரன்ஸை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க இருப்பதாகவும், இப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகும் என்றும் தெரிவித்தார்கள்.

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions