400 ஏழை குழந்தைகளின் கல்விச்செலவை முழுவதும் ஏற்றார் லாரன்ஸ்

Bookmark and Share

400 ஏழை குழந்தைகளின் கல்விச்செலவை முழுவதும் ஏற்றார் லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்  ஏழை, எளியவர்களுக்கு உதவுவதில் மிகவும் அக்கறை காட்டுவார். மேலும் இவர் நல்ல மனிதநேயம் கொண்டவர்.

சமீபத்தில் இவர் இயக்கி நடிக்கும் 2 புதிய படங்களுக்காக கிடைத்த ரூ.1 கோடியை, இளைஞர்களுக்காக வழங்கினார். 100 இளைஞர்களிடம் இந்த பணத்தை கொடுத்து அவர்கள் மூலம் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்தார்.

இப்போது 400 ஏழை குழந்தைகளை தேர்வு செய்து, எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை அவர்களுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் வழங்குவதாக அறிவித்ள்ளார். இதற்காக சென்னையில் 200 ஏழை குழந்தைகளை தேர்வு செய்து அவர்களை சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார் ராகவா லாரன்ஸ்.

மேலும் வெளியூர்களில் தேர்வு செய்யப்படும் 200 ஏழை மாணவ–மாணவிகளுக்கு அந்த பள்ளியின் கிளைகள் உள்ள வெளியூர்களில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கான விழாவில் பேசிய லாரன்ஸ் “இந்த 400 குழந்தைகளும் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை படிக்கும் அனைத்து கட்டணத்தையும் தனது ‘லாரன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்’ அறக்கட்டளை செலுத்தும்” என்று கூறினார்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions