கோலிவுட்டை உலுக்கிய லாரன்ஸ்!

Bookmark and Share

கோலிவுட்டை உலுக்கிய லாரன்ஸ்!

லாரன்ஸ் இயக்கி நடித்த படங்களில் காஞ்சனா படம்தான் மெகா ஹிட்டானது. இருப்பினும் அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கியபோது பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை. லாரன்சேகூட எப்படியோ தப்பித்தால் போதும் என்கிற நிலையில்தான் இரண்டு ஆண்டுகளாக உருண்டு புரண்டு காஞ்சனா-2 படத்தை இயக்கி வெளியிட்டார். 

ஆனால், அவர் நேரம் சூப்பராக இருந்தது. விளைவு, காஞ்சனா-2வும் மெகா ஹிட்டாகி விட்டது. இது லாரன்சுக்கு பன்மடங்கு எனர்ஜியாகி விட, இன்னும் இதேபோன்று பத்து படங்கள் வரை எடுப்பேன் என்று வரிந்து கட்டியுள்ளார்.

ஆனால் அவரது இந்த வெற்றிகளைப்பார்த்து இப்போது கோடம்பாக்கத்திலுள்ள பெரும்பாலான டைரக்டர்களும் பேய் கதைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்

குறிப்பாக, லாரன்ஸ் கொடுத்த இந்த மெகா ஹிட் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வரை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. அதனால், பிரமாண்டங்களை முன்வைத்தே தனது படங்களுக்கான கதைகளை தயார் செய்யும் அவரும், தனது அடுத்து ஹாலிவுட் பாணியில் அமானுஷ்யத்தை கலந்து பிரமாண்ட பேய் படம் ஒன்றை இயக்கும் யோசனையில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions