வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ்

Bookmark and Share

வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ்

‘முனி’, ‘காஞ்சனா’ ஆகிய வெற்றிப்படத்தை இயக்கி நடித்த, லாரன்ஸ் சமீபத்தில் ‘காஞ்சனா 2’ படத்தை இயக்கி நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பேய் படமாக வெளியான ‘காஞ்சனா 2’வில் லாரன்சுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார். 

மூன்று தொடர் வெற்றி படங்களை எழுதி, இயக்கி நடித்த லாரன்ஸ் தற்போது வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் புதிய படத்தினை எழுதி இயக்கி நடிக்கவுள்ளார். இப்படம் பேய் படத்தில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. தற்போது கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions