பிரமாண்டமாக அரங்கேறும் லயன் பட பாடல்கள்

Bookmark and Share

பிரமாண்டமாக அரங்கேறும் லயன் பட பாடல்கள்

நடிகர் பாலகிருஷ்ணாவின் அசுர  நடிப்பில்  வேகமாக வளர்ந்து வரும் லயன் படத்தின் பாடல்கள் வெளியீட்டை பற்றிதான் டோலிவுட் திரை உலகில் இடைவிடாத பேச்சு ஓடிக் கொண்டிருக்கின்றது.

காரணம் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா 3D தொழில்நுட்பத்தில் பார்க்கும் வண்ணம் நடைபெறவுள்ளதாம் இதற்கான தயாரிப்பு செலவு மட்டும் 35 லட்சம் என்று கூறப்படுகின்றது.

விரைவில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு ஆந்திர பிரசே முதல்வர் சந்திரபாபு நாயடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

ருத்ரபதி ரமணா ராவ்  தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார். இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகி வரும்  இப்படம் இம்மாத இறுதியில் அதாவது ஏப்ரல் 30 தேதி திரைக்கு வரும் என தெரிகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions