உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வரும் லயன்!

Bookmark and Share

உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வரும் லயன்!

தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் லயன் படம், மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வருவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில், நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை த்ரிஷா மற்றும் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே  நடித்துள்ள லயன் படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இவரது இசையில் மிக பிரமாண்டமாக அரங்கேறிய இப்படத்தின் பாடல்கள் ரசிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும்  இப்படம் மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும்   திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions