லயன் ஆடியோ ரிலீசில் சந்திரபாபு நாயுடு?

Bookmark and Share

லயன் ஆடியோ ரிலீசில் சந்திரபாபு நாயுடு?

நந்தமுரி  பாலகிருஷ்ணாவின் லயன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை தாங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும்  ஏப்ரல் மாதம் 9ம் தேதி ஐதராபத்தில் உள்ள ஷில்பா கலா வேதிகாவில் நடைபெற உள்ளது.

இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த படத்தில் பாலையாவிற்கு இரண்டு வேடம். திரிஷாவும், ராதிகா ஆப்தேவும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

பாலையாவோடு  திரிஷா இணையும் படம் என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது இயக்குனர் சத்ய தேவாவின் முதல் படமாகும். மணி ஷர்மா இசை அமைக்கிறார். ருத்ரபதி ரமணா ராவ் மிகுந்த பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions