மேனேஜர் இல்லாததால் லேனாவுக்கு தாமதமாக கிடைத்த பாலிவுட் வாய்ப்பு..!

Bookmark and Share

மேனேஜர் இல்லாததால் லேனாவுக்கு தாமதமாக கிடைத்த பாலிவுட் வாய்ப்பு..!

மலையாள சினிமாவில் நுழைந்த இந்த பதினைந்து ஆண்டுகளில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை மெருகேற்றும் நடிப்பை கொடுக்க கூடியவர் தான் லேனா.

டூயட் பாடும் கதாநாயகியாக நடித்தது ஒன்றோ, இரண்டோ படங்களில் தான். அதன்பின் வந்ததெல்லாம் பாசமுள்ள அக்கா, அண்ணி வேடங்கள் தான்.

இப்போது லேனாவுக்கு இந்தியில் ஏர்லிப்ட் என்கிற படத்தில் அக்சய் குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே சந்தோசம்.

இத்தனை வருடம் பீல்டில் இருந்தாலும் லேனாவுக்கென்று மேனேஜரோ, பி.ஆர்.ஒவோ யாருமே இல்லை. மலையாளத்தை பொறுத்தவரை அவரது பட வாய்ப்புகளை அவர் தான் தேடிக்கண்டுபிடிக்கிறார்.

தற்போது பாலிவுட் வாய்ப்பு கூட படத்தின் இயக்கு னர் ராஜ் மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்பதாலும் லேனாவின் நடிப்பை பற்றி நன்கு தெரிந்தவர் என்பதாலும் கிடைத்தது தானாம்.. ஆனால் தனக்கு பாலிவுட் வாய்ப்பு தாமதமானதற்கு காரணம், தனக்கென மேனேஜர் இல்லாததால் தான் என்கிறார் லேனா.

காரணம் பாலிவுட்டை பொறுத்தவரை கோடிகளில் பணம் புழங்கும் இடம்..

அங்கே எல்லாமே சிஸ்டமேட்டிக் தான். அவர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் நடிகர் நடிகைகளின் மேனேஜர்கள் தான் படம் முடியும் வரை பொறுப்பு ஏற்கவேண்டுமாம்.

இப்படி சொல்கிற லேனாவுக்கு அப்படி ஒரு நபர் இதுவரை இல்லாததால், மேனேஜர் இல்லாதது சாதகமா அல்லது பாதகமா என்பது கூட தனக்கு தெரியவில்லை என்கிறார்.


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்: இலியானா
கோழிக்கோட்டில் பிட்னெஸ் சென்டர் தொடங்குகிறார் லேனா..!
இனி அம்மா வேடங்களில் நடிக்கமாட்டாராம் லேனா..!
லேனாவுக்கு காமெடி ரோலில் நடிக்க ஆசையாம்..!
மலையாள நடிகை லெனா கருத்து வேறுபாட்டால் திடீர் விவாகரத்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions