கோழிக்கோட்டில் பிட்னெஸ் சென்டர் தொடங்குகிறார் லேனா..!

Bookmark and Share

கோழிக்கோட்டில் பிட்னெஸ் சென்டர் தொடங்குகிறார் லேனா..!

தமிழில் அநேகன் படத்தில் டாக்டராக நடித்து, சாப்ட்வேர் பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்கும் சைக்கோ தெரபிகள் தருவாரே அவர் தான் மலையாள நடிகை லேனா என்பது உங்களுக்கு தெரியும்.

அவர்தான் இப்போது உடம்பை குறைக்க, தேவையில்லாத எடையை குறைக்க வைப்பதற்காக கோழிக்கோட்டிலும் திருச்சூரிலும்  ஆகிருதி என்கிற பெயரில் பிட்னெஸ் சென்டர் தொடங்க உள்ளார்..

தனது தோழிகளான லூசியா, விருந்தா ஆகியோருடன் இணைந்து இதை ஆரம்பிக்கும் லேனா, வரும் ஆகஸ்ட் மாதத்தில் கோழிக்கோட்டில் முதலில் இந்த சென்டரை துவங்குகிறார்.

இதில் குறைந்த செலவிலேயே பயிற்சிகள் பெறலாம் என்பதுதான் ஸ்பெஷல்.

அதுமட்டுமல்ல, தான் இத்தனை நாட்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்த எடைக்குறைப்புக்கான டிப்ஸ்களையும் வருபவர்களுக்கு தர இருக்கிறார் லேனா.. தற்போது அக்ஷய் குமாருடன் இந்திப்படம் ஒன்றில் நடித்து வரும் லேனா, பெரும்பாலும் அம்மா நடிகையாக நடித்து வந்தாலும் அவரது வயது குறைவு என்பதும் அவர் இப்போதும் சரியாக மெயின்டெய்ன் பண்ணும் அவரது உடற்கட்டும் இந்த பிட்னெஸ் சென்டருக்கு வாடிக்கையாளர்களை இழுத்துவரும் என்பதில் ஐயமில்லை.


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்: இலியானா
இனி அம்மா வேடங்களில் நடிக்கமாட்டாராம் லேனா..!
மேனேஜர் இல்லாததால் லேனாவுக்கு தாமதமாக கிடைத்த பாலிவுட் வாய்ப்பு..!
லேனாவுக்கு காமெடி ரோலில் நடிக்க ஆசையாம்..!
மலையாள நடிகை லெனா கருத்து வேறுபாட்டால் திடீர் விவாகரத்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions