லேனாவுக்கு காமெடி ரோலில் நடிக்க ஆசையாம்..!

Bookmark and Share

லேனாவுக்கு காமெடி ரோலில் நடிக்க ஆசையாம்..!

அனேகன் படத்தை பார்த்தவர்கள் அனைவரையுமே படத்தில் வரும் பெண் டாக்டர் கதாபாத்திரம் ரொம்பவே கவர்ந்திருக்கும்.. அவர்தான் மலையாள குணச்சித்திர நடிகையான லேனா.. இந்தப்படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை மெருகேற்றும் நடிப்பை கொடுக்க கூடியவர் தான் லேனா. மலையாள சினிமாக்களில் தவறாது இவரது முகம் தட்டுப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

வருடத்திற்கு பத்துப்படங்களிலாவது நடித்துவிடும் லேனா, சினிமாவில் நுழைந்த இந்த பதினைந்து ஆண்டுகளில் டூயட் பாடும் கதாநாயகியாக நடித்தது ஒன்றோ இரண்டோ படங்களில் தான்.

இன்னும் சில படங்களில் கதாநாயகி ரோல் தான் என்றாலும் ஆரம்பத்திலேயே ஹீரோவின் மனைவியாக, குழந்தைக்கு தாயாக குடும்பத்தலைவியாக நடித்திருப்பார்.

அதன்பின் வந்ததெல்லாம் பாசமுள்ள அக்கா, அண்ணி வேடங்கள் தான். அவ்வளவு ஏன் பத்து வயது பையனுக்கு அம்மாவாக நடித்தது முதல் துல்கர் சல்மானுக்கு கூட அம்மாவாக நடித்துவிட்டார்.

ஆனால் இவர் நடித்த கேரக்டர்கள் எல்லாம் பெரும்பாலும் சோக கீதம் வாசிப்பதாகவே இருந்தன. அதனால் தனது சோக முகத்தை மாற்ற விரும்பும் லேனா, தற்போது காமெடிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடிக்க கதை தேடிக்கொண்டு இருக்கிறார். 


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்: இலியானா
கோழிக்கோட்டில் பிட்னெஸ் சென்டர் தொடங்குகிறார் லேனா..!
இனி அம்மா வேடங்களில் நடிக்கமாட்டாராம் லேனா..!
மேனேஜர் இல்லாததால் லேனாவுக்கு தாமதமாக கிடைத்த பாலிவுட் வாய்ப்பு..!
மலையாள நடிகை லெனா கருத்து வேறுபாட்டால் திடீர் விவாகரத்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions