லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்

Bookmark and Share

லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்

கோ  படத்தின் ஹிமலாய வெற்றிக்கு பின்னணியில் இருந்த RS Infotainment pvt ltd.,  நிறுவனத்தினர்  தங்களது அடுத்த படைப்பான ' கோ 2' படம் மூலம்  தங்களது வெற்றியை  தொடர உள்ளனர்.

'கோ 2' படம் வர்த்தக ரீதியாக ஏற்படுத்தி உள்ள பெரும் எதிர்பார்ப்பு ,சமீபத்தில் நடந்த அந்தப் படத்தின் இசை முன்னோட்டத்தில் இளம் இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. 

பாபி சிம்மா ,பிரகாஷ்ராஜ் , நிக்கி கல்ராணி ஆகியோரின் நடிப்பில் புதிய இயக்குனர் சரத் இயக்கத்தில் உருவாகும் இந்தத்  திரைப் படத்தின் இசை நாளை [அக்டோபர் 1 ]வெளி ஆகிறது.

'தரமான படம்,நிறைவான இசை என்ற மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் எல்ரெட்  கூறுகையில் ' கோ ' எங்களது நிறுவனத்துக்கு பெரும் பெயர் ஈட்டி தந்த திரைப்படமாகும் 'கோ 2'  பெயரளவில்  மட்டுமல்ல, கதை களத்திலும் மட்டுமல்ல, இசை வடிவத்திலும்   கூட 'கோ' வுக்கு இணையானது  என்பதை இப்படத்தின் பாடல்கள் நிரூபிக்கும்.

இளம் இசை அமைப்பாளர் லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு என்று நிச்சயம் பெருமையாகக் கூறலாம். நாளை வெளியாகும் 'கோ 2' இசை , பாடல்களின் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் என்பதில் எனக்கு நிச்சயம்  நம்பிக்கை உண்டு.

ஒருத் திரைப்படம் பெரும் வெற்றிப் பெற இசையின் வெற்றிதான் பிரதானமாக இருக்க வேண்டும் . அந்த விதத்தில் 'கோ2' திரைப் படத்தின் இசை,படத்தின் வெற்றிக்கு நிச்சயம் உதவும்' என்றார்.


Post your comment





Related News
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!
கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது! ஷாக்கான படக்குழு
உல்லாசமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நாயகி - வைரலாகும் புகைப்படம்.!
டெல்லியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை - அதிரடி தகவல்.!
சன்னி லியோனால் டார்ச்சருக்கு ஆளாகிய தமிழ் நாயகிகள்
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions