‘வாயா என் வீரா’ பாடல் மூலம் அறிமுகமான லியோன் ஜேம்ஸ்

Bookmark and Share

‘வாயா என் வீரா’ பாடல் மூலம் அறிமுகமான லியோன் ஜேம்ஸ்

இன்றைய டிஜிட்டல் காலத்தில் சந்தர்ப்பங்களும் அதற்கான சாத்தியங்களும் கிடைப்பது எளிதாகிவிட்டது. அப்படிப்பட்ட டிஜிட்டல் ஊடகத்தின் வழியே தமிழ் சினிமாவிற்கு பல திறமையான இளைஞர்கள் கிடைத்துள்ளனர்.

யூடியுபில் சக்கை போடு போட்ட தனது  ‘வாயா ஏன் வீரா’ என்ற ஒற்றை பாடல் மூலம் காஞ்சனா-2 படத்தில்   இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் லியோன் ஜேம்ஸ்.

இந்தியாவின் தலைசிறந்த திரை இசை கலைஞர்களுடன் பல மேடை நிகழ்ச்சிகளில் கீபோர்டு வாசித்துள்ள இவர். RS இன்ஃபொடெயின்மென்ட் நிறுவனத்தின்  ‘கோ-2’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.“ எனது சிறு வயதிலிருந்து பியானோ கற்று வருகிறேன்.

பள்ளிக் காலம் முதல் இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் ‘ஜின்க்ஸ்’ மற்றும் ‘பாஸ்-இன்-ப்ரிட்ஜ், க்ரூவ்#3, ப்ராஜெக்ட் யூஜ் எனப் பல இசைக் குழுக்களில் சேர்ந்து வாசித்து வருகிறேன்.

ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு சிறு வயதிலேயே பாட்டு பாடியது எனது பாக்கியம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார் அவர்களுக்கு கீபோர்டு வாசித்து வந்தேன். “ எனக் கூறினார் இளம் இசையமைப்பாளர் லியோன்.

“ யுடியுபில் இருந்த என்னுடைய பாடல்களில் ஒன்றான ‘ வாயா என் வீரா’ பாட்டை பார்த்துதான் காஞ்சனா-2 படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் ‘வாயா என் வீரா’ மற்றும் ‘சண்டிமுனி’ பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னை தமிழ் திரை இசையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளது.

காஞ்சனா-2 படத்தின் வெற்றி எனக்கு மிகுந்த நம்பிக்கையளிதுள்ளது. பாபி சிம்ஹா நடிப்பில் RS இன்ஃபொடெயின்மென்ட் நிறுவனம்  ‘கோ 2’ படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

சிறுவயதிலிருந்த ராஜா கதைகளும், திகில் நிறைந்த பேய் கதைகளும் கேட்டு வளர்ந்தவன் நான். என் முதல் படம் ஒரு பேய் திகில் படம், கோ என்றால் ராஜா. இது தற்செயலனாதாகக் கூட இருக்கலாம் .” என்று அழகிய புன்னகையுடன் கூறினார் ஜேம்ஸ்.    

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions