ஆர்யா-பிருத்விராஜை தொடர்ந்து மம்முட்டியை இயக்குகிறார் லிஜோ ஜோஸ்..!

Bookmark and Share

ஆர்யா-பிருத்விராஜை தொடர்ந்து மம்முட்டியை இயக்குகிறார் லிஜோ ஜோஸ்..!

2013ல் மலையாளத்தில் பஹத் பாசில், இந்திரஜித், ஸ்வாதி நடித்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய 'ஆமென்' படத்தை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி.

இவர் தான் தற்போது பிருத்விராஜ், ஆர்யா இருவரும் மலையாளத்தில் இணைந்து நடித்துவரும் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்த ஸ்டார் ஹீரோக்களுடன் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித், ஆசிப் அலி மற்றும் சன்னிவெய்ன் ஆகியோரும் நடிப்பதால், இது அக்மார்க் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இந்தப்படத்தை முடித்துவிட்டு, லிஜோ ஜோஸ் அடுத்ததாக மம்முட்டியை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக இப்போதே ஒரு பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ.வி.விஜயன் என்பவர் எழுதிய 'கஸக்கிண்டே இதிகாசம்' என்கிற நாவலை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்திருப்பதாகவும், இது அதிகாரப்பூர்வமாக இன்னும் சில நாட்களில் உறுதிசெய்யப்படலாம் எனவும் தெரிகிறது.


Post your comment





Related News
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
ஹீரோயினை குஞ்சாக்கோ போபனுக்கு சிபாரிசு செய்த லால்ஜோஸ்
ஜீத்து ஜோசப் டைரக்சனில் நயன்தாரா..!
ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!
\'லாலேட்டன்\' படத்தை இயக்கப்போகும் இரண்டு \'லால்\'கள்..!
லால் vs லால் ; பத்து வருட பனிப்போர் முடிவுக்கு வருமா...?
துல்கர் சல்மானுக்காக த்ரில்லர் கதை எழுதுகிறார் லால்ஜோஸ்..!
லால் ஜோஸ் டைரக்சனில் முழு ஹீரோவாக நடிக்கிறார் நிவின்பாலி..!
“ஜீத்து ஜோசப் காப்பியடிக்கவில்லை” - உயர்நீதிமன்றம் \'பளிச்\' தீர்ப்பு..!
ரஷ்யாவில் மைனஸ் 6 டிகிரி குளிரில் சிக்கிய லால்ஜோஸ் டீம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions