ரஜினி உள்பட லிங்கா படக்குழுவினர் இன்று ஆஜராக வேண்டும்: கோர்ட்டு நோட்டிஸ்

Bookmark and Share

ரஜினி உள்பட லிங்கா படக்குழுவினர் இன்று ஆஜராக வேண்டும்: கோர்ட்டு நோட்டிஸ்

மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் தனது கதையை திருடி லிங்கா படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

எனவே அந்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது ‘முல்லைவனம் 999‘ படத்தின் கதையை திருடி, லிங்கா படத்தை தயாரித்து உள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமா கதாசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி லிங்கா படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க கெடு விதித்து உத்தரவிட்டது.

அதன்பேரில் கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று (8-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ், கே.எஸ்.ரவிக்குமார், பொன்குமார் மற்றும் அவர்கள் தரப்பு வக்கீல்களுக்கு கோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

அதில், இந்த வழக்கை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால், கோர்ட்டு தாமாக முன்வந்து முன்கூட்டியே (மார்ச் 8-ந்தேதி) விசாரணைக்கு பட்டியலிடுகிறது.

ஆகையால் இன்று நடக்கும் விசாரணையில் மனுதாரர் மற்றும் எதிர்தரப்பு வக்கீல்கள் தங்களது கட்சிக்காரர்களுடன் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Post your comment





Related News
பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
சிவலிங்கா, கடம்பன், பவர் பாண்டி மொத்த வசூல் இதோ- எந்த படம் ஹிட்?
பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது பா.பாண்டியா, சிவலிங்கா, கடம்பனா- இதோ ரிசல்ட்
சிவலிங்கா அரங்குகளில் சிரிப்பு மழை... ஆஹா வந்துட்டாருய்யா வடிவேலு!
விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு
சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்த லைகா நிறுவன உயர் அதிகாரி- காரணம் என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions