லிங்கா படத்தின் கதையை தாக்கல் செய்ய படக்குழுவினருக்கு மதுரை கோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

லிங்கா படத்தின் கதையை தாக்கல் செய்ய படக்குழுவினருக்கு மதுரை கோர்ட்டு உத்தரவு

மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், தனது கதையை திருடி, லிங்கா படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, தேவைப்படும் நேரத்தில் லிங்கா படத்தின் கதையை தாக்கல் செய்கிறோம் என்று படக்குழுவினர் தரப்பு வக்கீல்கள் எம்.பி.செந்தில், ஆர்.நர்மதன் ஆகியோர் தெரிவித்தனர்.

ஆனால், ‘முல்லைவனம் 999’ என்ற படத்தின் கதையை திருடி லிங்கா படம் எடுக்கப்பட்டு உள்ளது என்று வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நாங்கள் ‘முல்லைவனம் 999’ படத்தின் கதையை கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டோம்.

எதிர்தரப்பினரும் லிங்கா படத்தின் கதையை தாக்கல் செய்தால் தான் 2 படத்தின் கதையையும் ஒப்பிட்டு கோர்ட்டு விசாரிக்க முடியும். ஆகையால் அந்த படத்தின் கதையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல்கள் பி.ரமேஷ், கார்த்திகேயன், மேக்சன்லோபோ ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விஸ்வநாதன், லிங்கா படத்தின் கதையை வருகிற 14-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று படக்குழுவினருக்கு உத்தரவிட்டார்.


Post your comment





Related News
பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
சிவலிங்கா, கடம்பன், பவர் பாண்டி மொத்த வசூல் இதோ- எந்த படம் ஹிட்?
பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது பா.பாண்டியா, சிவலிங்கா, கடம்பனா- இதோ ரிசல்ட்
சிவலிங்கா அரங்குகளில் சிரிப்பு மழை... ஆஹா வந்துட்டாருய்யா வடிவேலு!
விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு
சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்த லைகா நிறுவன உயர் அதிகாரி- காரணம் என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions