தடைகளை தாண்டி 100வது நாளை தொட்டார் லிங்கா

Bookmark and Share

தடைகளை தாண்டி 100வது நாளை தொட்டார் லிங்கா

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. அவர் நேரடியாக நடித்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதினார்கள். இதை மனதில் கொண்டு ரஜினி அடுத்த 6 மாத்திற்குள் தான் நேரடியாக நடித்த படம் ஒன்றை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

8 மாதத்திற்குள் ஒரு படத்தை இயக்கிவிடுவீர்களா என்று கே.எஸ்.ரவிகுமாரை கேட்டார். தயாரிக்க முடியுமா என்று தன் நண்பர் ராக்லைன் வெங்கடேசை கேட்டார்.

இருவரும் செய்யலாம் என்று உறுதிபட சொல்லவே அவர்களை நம்பி லிங்காவைத் தொடங்கினார். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரி படம் அமையும் என்று ரஜினி எதிர்பார்க்கவில்லை. அதிரிபுதிரி எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு.

அந்த எதிர்பார்ப்பையும் லிங்காவால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது. படத்தின் பட்ஜெட்டை கணக்கிடும்போது லிங்கா லாபமான படம்தான். ஆனால் அளவுக்கு மீறிய அதன் வியாபாரம்தான் பல்வேறு சிக்கல்களை உண்டாக்கியது.

லிங்கா விநியோகஸ்தர்கள் தங்களுக்கு 33 கோடி நஷ்டம் என்று கொடிபிடிக்க லிங்காவின் இமேஜ் அப்படியே கவிழ்ந்து விட்டது. இப்போது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடுடன் பிரச்சினை முடிந்திருக்கிறது.

ரஜினி இதுகுறித்து வெளிப்படையாக பேசாவிட்டாலும் நிச்சயம் அவர் மனம் வருந்தியிருப்பார். சிலரை நம்பி அவசரப்பட்டுவிட்டோமோ என்று கருதியிருப்பார். நல்லெண்ண அடிப்படையில் நஷ்டஈட்டை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்ததும் ரஜினிதான்.

இத்தனை தடைகளையும் தாண்டி கடந்த ஆண்டு டிசம்பர் 12ந் தேதி வெளியான லிங்கா இன்று 100 வது நாளை தொட்டிருக்கிறது. திரையிட்ட தியேட்டர்களில் லிங்கா தொடர்ந்து ஓடவில்லைதான்.

ஆனாலும் தற்போது தேவி, ஆல்பட், அபிராமி வளாகங்களில் ஒன்றிரண்டு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் செகண்ட் ஷிப்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. 


Post your comment





Related News
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions