'லிங்கா' பிரச்சனை, தீர்வா, போராட்டமா...?

Bookmark and Share

'லிங்கா' பிரச்சனை, தீர்வா, போராட்டமா...?

'லிங்கா' நஷ்ட ஈட்டுப் பிரச்சனை தொடர்பாக இன்று மாலைக்குள் முடிவு ஏதாவது எட்டப்படுமா என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

பத்து நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த லிங்கா வினியோகஸ்தர்கள் தங்களுடைய 33 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டைத் தரவில்லை என்றால் ரஜினி வீட்டிற்கு முன் 'மெகா பிச்சை' போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து 'லிங்கா' விவகாரத்தில் காட்சிகள் மாறின. தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சரத்குமாரும் வினியோகஸ்தர்களைச் சந்தித்து, பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண முயற்சித்தனர்.

நேற்று காலை ரஜினிகாந்தைச் சந்தித்து சரத்குமார் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து இன்று மாலை லிங்கா வினியோகஸ்தர்களும் ரஜினிகாந்த் சார்பாக, தயாரிப்பாளர் சங்கத்தினரும், சரத்குமார் உட்பல சில திரையுலகினரும் சந்தித்துப் பேச உள்ளார்களாம்.  

அந்தப் பேச்சு வார்த்தையில் நஷ்டத் தொகையில் மேலும் சில கோடிகளைக் கூட குறைத்துக் கொள்ள வினியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ரஜினி தரப்பில் சம்மதம் தெரிவித்து நஷ்டத் தொகையை தர விரும்பினால் பிரச்சனை சுமூகமாக முடியும் என்கிறார்கள்.

அப்படி எந்தத் தீர்வும் எட்டப்படாமல் போனால் வினியோகஸ்தர்கள் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளார்கள் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

வினியோகஸ்தர்கள் 33 கோடி நஷ்ட ஈட்டுத் தொகையை 20லிருந்து 25 கோடி வரை குறைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றோடு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்பதே திரையுலகினர், ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Post your comment





Related News
ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
லிங்கா பட நஷ்டஈடு சர்ச்சை படமாகிறது: ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன்?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions