லிங்கா நஷ்டஈடு பணத்தை பிரிப்பதில் கட்டபஞ்சாயத்து: விநியோகஸ்தர்கள் அறிக்கை

Bookmark and Share

லிங்கா நஷ்டஈடு பணத்தை பிரிப்பதில் கட்டபஞ்சாயத்து: விநியோகஸ்தர்கள் அறிக்கை

'லிங்கா' படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் மன்னன், வட, தென் ஆற்காடு விநியோகஸ்தர் கிருஷ்ணமூர்த்தி, நெல்லை விநியோகஸ்தர் ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

லிங்கா படத்தினை வெளியிட்ட வகையில் செங்கல்பட்டு ஏரியாவுக்கு ஏழரை கோடி ரூபாயும், ஆற்காடு ஏரியாவுக்கு நான்கு கோடி ரூபாயும், நெல்லை ஏரியாவுக்கு இரண்டரை கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் அறிவுறுத்தல் பேரில் பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் 12½ கோடி ரூபாயை நஷ்டஈடாக தர ஒப்புக் கொண்டார்.

நஷ்டம் என்று கூறி நிவாரணம் பெற்று தர சங்கங்களை அணுகியபோது யாரும் ஆதரவு தரவில்லை. தற்போது ரஜினிகாந்த் பணம் தருகிறார் என்றதும் பங்கு போட்டு தருவதாக கூறி சங்கங்கள் மூக்கை நுழைப்பதன் மர்மம் புரியவில்லை.

இந்த படத்தை வெளியிட்ட வகையில் நஷ்டம் அடைந்திருப்பது விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மட்டுமே. அவர்களை கலந்து பேசாமல் திருப்பூர் சுப்பிரமணி தான் தோன்றி தனமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

ரஜினி நடித்த பல படங்களை திரையிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தவர் திருப்பூர் சுப்பிரமணி. பாபா படத்தில் இழப்பு என்றதும் அசலுடன் லாபமும் கேட்டு பெற்றார். ஆனால் லிங்கா விஷயத்தில் விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஏற்க வேண்டும் என்று சொல்வது முரண்பாடாக உள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு அநீதி இழைப்பதை இவர் நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.

ராக்லைன் வெங்கடேஷ் பணத்தை ஏரியா வாரியாக பிரித்து கொடுத்தால்தான் பிரச்சினை முடியும். மாறாக கட்ட பஞ்சாயத்து நடந்தால் போராட்டங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Post your comment





Related News
ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
லிங்கா பட நஷ்டஈடு சர்ச்சை படமாகிறது: ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன்?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions