லிங்கா பட நஷ்டஈடு சர்ச்சை படமாகிறது: ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன்?

Bookmark and Share

லிங்கா பட நஷ்டஈடு சர்ச்சை படமாகிறது: ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன்?

‘லிங்கா’ பட நஷ்ட ஈடு சர்ச்சையை மையமாக வைத்து விநியோகஸ்தர்கள் புதுபடம் எடுக்கின்றனர். இதில் ரஜினி வேடத்தில் நடிக்க பவர் ஸ்டார் சீனிவாசனை தேர்வு செய்துள்ளனர். படப்படிப்பு விரைவில் துவங்க உள்ளது. 

ரஜினியை கேலி செய்து இந்த படத்தை எடுப்பதாக இணைய தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. ‘லிங்கா’ படத்தில் நஷ்ட ஈடு தராமல் ஏமாற்றப்பட்டதாகவும் இப்படத்தில் காட்சி வைப்பதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து லிங்கா விநியோகிஸ்தர் சிங்காரவேலனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– ரஜினியை புண்படுத்தும் நோக்கில் இந்த படத்தை எடுக்கவில்லை. பவர் ஸ்டார் சீனிவாசன் பெரிய நடிகராக வருகிறார். அவருடைய பல படங்கள் வெற்றி பெறுகின்றன. ஒரு படம் தோல்வி அடைகிறது.

இதனால் விநியோகிஸ்தர்கள் நஷ்டமடைகின்றார்கள். நஷ்டஈடு தொகையை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் இருந்து எப்படி பெறுகிறார்கள் என்பது கதை. ஜாலியாக ரசிக்கும்படி இந்த படத்தை எடுக்கிறோம். ரஜினியை அவமதிப்பது போல் எந்த காட்சியும் இருக்காது. ரஜினியே படத்தை பார்த்தால் சிரிப்பார். படம் வந்ததும் ரஜினிக்கு போட்டு காட்டவும் தயாராக இருக்கிறோம். இதில் சிங்கமுத்து, சென்ட்ராயன் உள்பட காமெடி நடிகர்கள் பலர் நடிக்க உள்ளனர் என்றார்.


Post your comment





Related News
ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions