சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் லிங்கா விநியோகஸ்தர்கள்!

Bookmark and Share

சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் லிங்கா விநியோகஸ்தர்கள்!

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு தரக்கோரி அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மெகா பிச்சை போராட்டத்துக்குப்பிறகு பிரச்சினை இன்னும் சூடு பிடித்தது. அதோடு, முதலில் சிறிய தொகையை நஷ்ட ஈடாக தருவதாக சொன்ன ரஜினிதரப்பு பின்னர் அதிக தொகை தர முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்தன.

நடிகர் சங்கத்தலைவரான சரத்குமார் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமூக தீர்வுக்கான பேச்சுவார்தையிலும் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில், லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சார்பில், லிங்கா படம் பற்றியோ, ரஜினி பற்றியோ யாரும் எதுவும் பேசக்கூடாது என்று கர்நாடக நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.

அதுமட்டுமின்றி, முக்கியமான ஊடகங்களும் லிங்கா பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் தடை வாங்கியிருக்கிறார்கள். இதனால், அடுத்து லிங்கா படம் சம்பந்தமாக சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் எதுவும் பேச முடியாமல் பின்வாங்கிவிட்டனர்.

இதையடுத்து, இந்த விசயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல லிங்கா படத்தினால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் முடிவெடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.


Post your comment





Related News
‘லிங்கா’ படம் தொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க அறிக்கை....
\'லிங்கா\' விவகாரம், சில படங்களின் வெளியீட்டிற்கும் பாதிப்பு ?
\'லிங்கா\' நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு திருப்பித்தர ரஜினி முடிவு
\'லிங்கா\' வால் அனுஷ்காவுக்கும் நஷ்டமாம்!
\'லிங்கா\' பிரச்சனை...பொங்கலன்று 600 திரையரங்குகள் மூடல்...?
போராட்டம் நடத்த அனுமதி கேட்டு \'லிங்கா\' வினியோகஸ்தர்கள் வழக்கு
அனுஷ்காவின் திருமணச் செய்தி...வதந்திதான்...
புதிய பட வாய்ப்புகளை தவிர்க்கும் அனுஷ்கா! விரைவில் டும்.. டும்.. டும்
\'லிங்கா\' குழு சரியாக கவனிக்குமா...?
லிங்கா பர்ஸ்ட் லுக் வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions