'லிங்கா' விவகாரம், சில படங்களின் வெளியீட்டிற்கும் பாதிப்பு ?

Bookmark and Share

'லிங்கா' விவகாரம், சில படங்களின் வெளியீட்டிற்கும் பாதிப்பு ?

'லிங்கா' நஷ்ட ஈட்டுப் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டு வருகிறது. லிங்கா படத்தால் நஷ்மடைந்த வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்கள் சிலரும் சில தினங்களுக்கு முன் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது லிங்கா படத்தால் நஷ்மடைந்த தொகை 33 கோடி ரூபாய் என்பதையும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், தயாரிப்பு தரப்பிலிருந்து வெறும் 3.3 கோடி ரூபாய் மட்டுமே நஷ்ட ஈடாகத் தர அவர்கள் தெரிவித்ததாகவும் அது தங்களுக்கு போதாது என்றும் தயாரிப்பு தரப்பிலும் தெரிவித்துவிட்டதாகச் சொன்னார்கள். இதனிடையே, அடுத்த கட்ட போராட்டமாக 'மெகா பிச்சை' என்ற பெயரில் ரஜினி வீட்டிலிருந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

மேலும், 'லிங்கா' நஷ்ட ஈட்டு விவகாரம் முடியும் வரை அந்தப் படத்தைத் தயாரித்த,  வாங்கி வெளியிட்ட, நிறுவனங்களுக்கு எதிராகவும் சில திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அப்படிப் பார்க்கும் போது, 'லிங்கா' படத்தை வாங்கி வெளியிட்ட ஈராஸ், வேந்தர் மூவீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் அவர்கள் செயல்பட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படத்தையும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரஜினி முருகன்' படத்தையும் ஈராஸ் நிறுவனம்தான் வாங்கியுள்ளது. அதனால் அந்தப் படங்களின் வெளியீட்டிற்கும் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை முழுவதுமாகக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் இரு முன்னணி நடிகர்கள்தான் அவரைத் தடுப்பதாகவும் வினியோகஸ்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கெனவே, கார்ப்பரேட் நிறுவனங்களால் தமிழ் சினிமாவில் சில பாதிப்புகள் ஏற்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆனாலும், இங்குள்ள சில தயாரிப்பு நிறுவனங்கள் அப்படிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வியாபார ஒப்பந்தம் போட்டு வருகின்றன. அதனால், அந்த தயாரிப்பு நிறுவனங்களையும் வினியோகஸ்தர்கள் எதிர்ப்புப் பட்டியலில் சேர்க்கவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் எழுந்துள்ள 'மெகா பிச்சை' போராட்டத்தால் இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் லிங்கா விநியோகஸ்தர்கள்!
‘லிங்கா’ படம் தொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க அறிக்கை....
\'லிங்கா\' நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு திருப்பித்தர ரஜினி முடிவு
\'லிங்கா\' வால் அனுஷ்காவுக்கும் நஷ்டமாம்!
\'லிங்கா\' பிரச்சனை...பொங்கலன்று 600 திரையரங்குகள் மூடல்...?
போராட்டம் நடத்த அனுமதி கேட்டு \'லிங்கா\' வினியோகஸ்தர்கள் வழக்கு
அனுஷ்காவின் திருமணச் செய்தி...வதந்திதான்...
புதிய பட வாய்ப்புகளை தவிர்க்கும் அனுஷ்கா! விரைவில் டும்.. டும்.. டும்
\'லிங்கா\' குழு சரியாக கவனிக்குமா...?
லிங்கா பர்ஸ்ட் லுக் வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions