லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை

Bookmark and Share

லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதுமட்டுமின்றி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையிட்ட தியேட்டர் அதிபர்களும் நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினார்கள். ஏறக்குறைய  9 மாதங்களுக்கு மேலாகியும் அந்த விவகாரம் இன்னும் தீர்வுக்கு வரவில்லை.

இதே போன்று வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தை திரையிட்ட தியேட்டர்அதிபர்களுக்கு பல கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா சில கோடிகளை தங்களுக்கு நஷ்டஈடாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை எழுப்ப உள்ளனர்.

ஞானவேல்ராஜா நஷ்ட ஈட்டை தராவிட்டால், அவர் அடுத்து வெளியிட உள்ள த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்துக்கு செக் வைக்க தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions