பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?

Bookmark and Share

பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?

லிங்கா படம் வெளிவந்து இத்தனை மாதங்களாகியும் அந்தப் படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகை இதுவரை தரவில்லை என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய இந்தப் பிரச்சனை இப்பொழுது மீண்டும் எழுந்துள்ளது.

பொதுவாக, ஒரு நடிகர் நடித்த படத்தில் பிரச்சனை என்றால், அந்த நடிகர் நடித்து அடுத்து வெளிவரும் படத்தில் தான் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனையை எழுப்புவார்கள்.

ஆனால், லிங்கா விவகாரத்தைப் பொறுத்தவரையில் அடுத்து ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள கபாலி படத்தில் எழுப்பாமல், பாயும் புலி படத்தில் பிரச்சனையை எழுப்பியுள்ளார்கள்.

ஒன்று லிங்கா படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த தயாரிப்பில் பிரச்சனையை உருவாக்க வேண்டும், அல்லது ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள அடுத்த படத்தில் பிரச்சனையை உருவாக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல், பாயும் புலி படத்தின் மீது பாய்வது ஏன் என கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.

தான் நடித்த 'லிங்கா' பட நஷ்ட ஈட்டுப் பிரச்சனை பல ரூபங்களில் விஸ்வரூபமெடுத்து வருவதை ரஜினிகாந்த், இனியும் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது, அவர் நேரடியாக தலையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த கோரிக்கை நிறைவேருமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு
லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions