லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்

Bookmark and Share

லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்

சென்னை ஐகோர்ட்டில், மேட்டூரை சேர்ந்த அமிர்தராஜ் என்பவர் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா என்ற படம் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது.

பொதுவாக தமிழில் தலைப்பு கொண்ட, தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கின்ற திரைப்படங்களுக்குத்தான் தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆனால், ‘லிங்கா’ என்பது தமிழ் வார்த்தை அல்ல. அது சமஸ்கிருத வார்த்தை. எனவே, இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்ததை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்து நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடர்வதற்கு என்று சில வரையறை உள்ளது.

வரி விலக்கு அளிப்பதை எல்லாம் எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது. வழக்கை வாபஸ் பெறுகிறீர்களா? இல்லை தள்ளுபடி செய்யட்டுமா?’ என்று கேட்டனர். இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் வக்கீல் கூறியதை தொடர்ந்து, மனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. 


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு
லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions