தாமதமாகும் லிங்கா செட்டில்மெண்ட்!

Bookmark and Share

தாமதமாகும் லிங்கா செட்டில்மெண்ட்!

ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி விநியோகித்த வகையில் தங்களுக்கு 40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தயாரிப்பாளர் திருப்பித் தரவேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் கோரி வந்தனர்.

உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்கள். படத்தை பற்றி அவதூறு பரப்பி ஓடாமல் செய்தது விநியோகஸ்தர்கள்தான் அதனால் நஷ்டஈடு தரமாட்டேன் என தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதில் தலையிட்ட ரஜினி என்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது விநியோகஸ்தர்களுக்கு உரிய நஷ்டஈடை கொடுத்து விடுங்கள் என்று ரஜினி கூறியதாக தெரிகிறது.

அதனால் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மூலம் நஷ்ட கணக்கை தனித்தனியாக கேட்டுள்ளார். சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களும் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பி கொடுக்கப்பட இருக்கும் நஷ்ட ஈட்டு தொகையின் ஒரு பகுதியை லிங்கா படத்தின் உலக உரிமையை வாங்கி உள்ள ஈராஸ் நிறுவனம் தரவேண்டும் என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கேட்டுள்ளார்.

கார்பரேட் நிறுவனமான ஈராஸ்சுக்கு நஷ்டஈடு கொடுக்கும் வழக்கம் இல்லை. அப்படி கொடுக்க முடிவு செய்தால் கம்பெனியின் போர்ட் மீட்டிங்கில் வைத்து பாஸ் செய்ய வேண்டும். இதற்கு பெரும்பான்மை இயக்குனர்கள் ஒப்புதல் தரவேண்டும். இந்த சூழ்நிலைகளால் நஷ்டஈடு செட்டில்மெண்ட் தாமதமாகி வருகிறது.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions