லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு

Bookmark and Share

லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு

சென்னை ஐகோர்ட்டில், ஆர்.சிங்காரவடிவேலன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரராக உள்ளேன். நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதி விநியோகம் உரிமத்தை பெற்றேன். ஆனால், இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்று இல்லாததால், தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து, எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு, இழப்பீடு வழங்கும்படி படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரிடம் முறையிட்டோம். எந்த பயனும் இல்லை.

இதற்கிடையில் 'லிங்கா' படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது. ரஜினிகாந்தின் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வரிவிலக்கு சலுகை பெறப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் தமிழில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தால், தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக இருந்தால், வரி விலக்கு அளிக்கப்படும்.

ஆனால், லிங்கா என்பது தமிழ் பெயர் இல்லை. இது சமஸ்கிருத வார்த்தையாகும். மேலும், லிங்கா படத்தின் கதை தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக இல்லை. எனவே, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசனும், ரஜினிகாந்தும் தகுதியில்லாத படத்துக்கு வரிசலுகை பெற்று, அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் கடந்த 3-ந் தேதி போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எஸ்.ஜோயல், ஜி.விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ.நடராஜன் நாளை ஆஜராக உள்ளார். 


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions