லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்

Bookmark and Share

லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்

‘லிங்கா’ படத்துக்கு ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அவற்றை திருப்பி தர வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதமும் இருந்தார்கள்.

ரஜினி இப்பிரச்சினையில் தலையிட்டு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கெடுக்கும்படி கோவை விநியேகாஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்தை நியமித்தார். அவரும் நஷ்டஈடு விவரங்களை திரட்டி அளித்துள்ளார். இதையடுத்து நஷ்டஈடாக ரூ.3½ கோடி அளிக்க படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முன் வந்துள்ளார். இதனை விநியோகஸ்தர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

இதுகுறித்து விநியோகஸ்தர் சிங்காரவேலு கூறியதாவது:–

‘லிங்கா’ படத்துக்கு ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கணக்கு விவரங்களை திருப்பூர் சுப்பிரமணியத்திடம் சமர்ப்பித்தோம். அவரும் ரஜினியிடம் பேசி வாங்கித் தருவதாக தெரிவித்தார்.

இப்போது தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் 10 சதவீதமாக ரூ.3½ கோடி மட்டுமே நஷ்டஈடாக தர முடியும் என்கிறார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டோம். மீண்டும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். எந்த மாதிரியான போராட்டம் என்பதை நாளை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions