பிச்சை எடுக்கும் போராட்ட தேதி நாளை அறிவிப்பு: லிங்கா விநியோகஸ்தர்கள் அறிக்கை

Bookmark and Share

பிச்சை எடுக்கும் போராட்ட தேதி நாளை அறிவிப்பு: லிங்கா விநியோகஸ்தர்கள் அறிக்கை

‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியா கிருஷ்ணகுமார், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஏரியா ரூபன், செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் மன்னன், மதுரை ஏரியா மணிகண்டன், சுப்ரா பிலிம்ஸ் பிரபு ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

‘லிங்கா’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டுமென நாங்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்.

இந்நிலையில் இந்த பிரச்சினையை திருச்சி– தஞ்சை விநியோகஸ்தர் சிங்காரவேலன் தூண்டி வருவதாகவும் அவர் தலைமையில் விநியோகஸ்தர்கள் செயல்படுவது போலவும் சித்தரிக்கிறார்கள். அதில் கடுகளவும் உண்மையில்லை.

திருச்சி–தஞ்சை ஏரியாவைவிட கோவை, செங்கல்பட்டு, மதுரை ஏரியாக்கள் அளவில் பெரியவை. சிங்காரவேலன் செய்துள்ள முதலீட்டை விட அதிகமான அளவில் இந்த ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் செய்திருக்கிறார்கள்.

அனைத்து விநியோகஸ்தர்களும் ஒன்று கூடி எடுக்கும் முடிவை சிங்காரவேலன் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறார். எங்களின் செய்தி தொடர்பாளராக அவரை வைத்திருக்கிறோம்.

அவர் திருச்சி ஏரியாவில் விநியோகம் செய்யும் உரிமையை பெற்றிருந்தாலும், அந்த ஏரியாவில் திரையரங்குகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் அனைத்தும் வேந்தர் மூவீஸ் பெயரிலும், சேலம் 7ஜி நிறுவனத்தின் பெயரிலும் உள்ளன. வேந்தர் மூவீஸ் மதனுக்கு அவர் மிகவும் நெருக்கமானவர் என்பதால் அந்த ஏரியாவை அவரின் நேரடி பார்வையில் வைத்திருந்தார்.

அவர் செய்த முதலீட்டை அவருக்கு மதன் கொடுத்துவிடுவார். அவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இருப்பினும் எங்களின் அழைப்பை தட்டாமல் கலந்து கொள்கிறார். 9 விநியோகஸ்தர்களில் 5 பேர் அ.தி.மு.க. அனுதாபிகள், செங்கல்பட்டு மன்னனும், கன்னியாகுமரி ரூபனும் அ.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருப்பவர்கள், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு கட்சிகளின் அனுதாபிகளாக இருக்கிறார்கள்.

நாங்கள் கொடுக்கும் செய்திகள் கூட்டாக எடுத்த முடிவின்படிதான் அறிவிக்கப்படுகிறது. இதனை கொச்சைபடுத்தும் விதமாக எங்களை சிங்காரவேலன் குழுவினர் என்று செய்தி வெளியிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். பிச்சை எடுக்கும் போராட்ட தேதி நாளை அறிவிக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions