கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்

Bookmark and Share

கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்

லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டம் தொடர்பான பல சிக்கல்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. அண்மையில் விஷால் நடித்த பாயும்புலி சிக்கல் கூட இதன் காரணமாக வந்தது.

இப்படியே தொடர்ந்த இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட ஒரு கூட்டம் நடந்தியுள்ளனர். அந்தக்கூட்டத்தில் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ் தயாரிப்பாளர்சங்கத்தலைவர் தாணு, செயலாளர் சிவா மற்றும் டி..ஜி.தியாகராஜன், கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

லிங்கா படத்தால் தீர்க்க பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக பனிரெண்டரைகோடி கொடுப்பதாகவும் அதில் ஆறரைகோடி ரஜினி கொடுப்பதாவும் மீதியை தாயரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ் கொடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

ரஜினி பணத்தை கொடுத்துவிட்டார். ராக்லைன்வெங்கடேஷ் கொடுக்கவேண்டிய ஆறு கோடியில், நாலேமுக்கால் கோடி கொடுத்துவிட்டு, நான் மிகவும் சிக்கலில் இருக்கிறேன், மீதி ஒண்ணேகால்கோடியை என்னால் தரஇயலாது என்று அந்தக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

அதைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துத் தராவிட்டால், பிரச்ச்னை மேலும் நீடிக்கும் என்பதால் திருப்பூர்சுப்பிரமணியம், “ரஜினிசார் படங்களை வெளியிட்டு நான் சம்பாதித்திருக்கிறேன் எனவே, அவர் கொடுக்கவேண்டிய ஒண்ணேகால்கோடியை நான் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லியுள்ளார்.

இதை கேட்டவுடன் ராக்லைன்வெங்கடேஷ்  அவருக்குக் கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுப்போய்விட்டாராம். இனிமேல் லிங்கா பிரச்சனை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு
லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions