லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்

Bookmark and Share

லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த தொகையை தர வேண்டும் என்றும் வலியுறுத்தி விநியோகஸ்தர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் இருந்தார்கள். ரஜினிக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

இதையடுத்து ரஜினி இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டார். அவர் சார்பில் திருப்பூர் சுப்பிரமணியம் விநியோகஸ்தர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

தயாரிப்பாளர் சங்கமும் சமரச முயற்சியில் ஈடுபட்டது. இதில் ரூ.12½ கோடி நஷ்ட ஈடாக விநியோகஸ்தர்களுக்கு அளிக்க முடிவானது. ஆனால் அதில் ரூ.5 கோடி தான் தரப்பட்டு உள்ளது என்றும் மீதி தொகையை இன்னும் தரவில்லை என்றும் வினியோகஸ்தர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் தங்களுக்கு ரஜினி ஒரு படத்தில் நடித்து தருவார் என உறுதி மொழி அளிக்கப்பட்டு அதுவும் மீறப்பட்டு உள்ளது என்றும் புகார் கூறினர்.

இதையடுத்து ரஜினிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்களும் குதிக்கிறார்கள் என்றும் கூறினர். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு
லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions