மீண்டும் ஆரம்பமாகும் 'லிங்கா' பிரச்சனை

Bookmark and Share

மீண்டும் ஆரம்பமாகும் 'லிங்கா' பிரச்சனை

'லிங்கா' தயாரிப்பாளர்கள், மற்றும் வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடையேயான பிரச்சனை மீண்டும் ஆரம்பமாகும் நிலை எழுந்துள்ளது.

இன்று மதியம் இப்படத்தை வாங்கி வெளியிட்ட செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கோவை ஏரியா வினியோகஸ்தர்கள்  மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 'லிங்கா' வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால், சொன்னபடி அந்தப் பணத்தை இதுவரை தரவில்லை என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைகளின்படி சுமூகத் தீர்வு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

நஷ்ட ஈட்டுத் தொகையை பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதன் பின் அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை தராமல் அப்படியே நிறுத்திவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் விரைவில் இரண்டு புதுப் படங்களில் நடிக்க உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க 'லிங்கா' வினியோகஸ்தர்கள் முடிவு செய்திருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு
லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions